• திருஞானசம்மந்தர்
    Thirugyanasambandhar
    அப்பர்
    Appar
    சுந்தரர்
    Sundarar
    மாணிக்கவாசகர்
    Manikkavasakar
Next Pradosham on: Sun Apr 21 2024
Temple News
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சித்திரைத் திருவிழாவானது, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவில் தினமும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம்..

மூன்றாம் திருநாள்-கைலாசபர்வதம்-காமதேனு
23.04.2015 சித்திரை-10 வியாழக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : சுமார் 7.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : தங்கச்சப்பரம்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் கல்யாண சுந்தரமுதலியார் மண்டகப்படி
இரவு எழுந்தருளும் நேரம் : சுமார் 7.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம்: கைலாசபர்வதம்-காமதேனு

நான்காம் திருநாள்-தங்கப்பல்லக்கு
24.04.2015 சித்திரை-11 வெள்ளிக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : சுமார் 9.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : சின்னக்கடைத்தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் செல்லுதல்
வாகனம் : தங்கப்பல்லக்கு
எழுந்தருளும் மண்டபம் : அழகப்பபிள்ளை- தானப்பபிள்ளை வகையறா வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி
மாலை எழுந்தருளும் நேரம் : சுமார் மாலை 6.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : தெற்கு வாசல், சின்னக்கடைத் தெரு வழியாக வந்து சித்திரை வீதிகள் சுற்றி கோயிலுக்குள் வருதல்
வாகன விபரம் : தங்கப்பல்லக்கு

ஐந்தாம் திருநாள்-தங்கக்குதிரை
25.04.2015 சித்திரை-12 சனிக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : சுமார் 9.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : மாசி வீதிகள்
வாகனம் : தங்கச்சப்பரம்
எழுந்தருளும் மண்டபம் : வடக்குமாசிவீதி இராமாயணச் சாவடி மண்டகப்படி
இரவு எழுந்தருளும் நேரம் : சுமார் 7.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : வடக்கு மாசிவீதி, கீழமாசி வீதி, அம்மன் சந்நிதி வழியாக கோயிலுக்குவருதல்
வாகன விபரம் : தங்கக்குதிரை
விபரம் : இரவு 7.30 மணிக்கு கோயிலுக்குள் எழுந்தருளி மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் வேடர் பறிலீலை.

ஆறாம் திருநாள்-தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்
26.04.2015 சித்திரை-13 ஞாயிற்றுக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : சுமார் 7.30 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள் வாகனம் : தங்கச்சப்பரம்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் சிவகங்கைராஜா மண்டகப்படி
இரவு எழுந்தருளும் நேரம் : சுமார் 7.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்
விபரம் : மாலை 6.00 மணிக்கு யானை மஹால் முன்பு மதுரை திரு கே. முரளிதரன் குடும்பத்தினர் கட்டளை திருக்கண் ஆகி பின்பு அருள்மிகு திருஞானசம்பந்தப்பெருமான் சைவ சமயத்தை நிலைநாட்டிய வரலாறு (சைவ சமய ஸ்தாபித வரலாற்றுலீலை) தல ஓதுவாரால் சொல்லப்பட்டு பின் வீதிக்கு எழுந்தருளல்.

ஏழாம் திருநாள்-எம். ராசுபண்டாரம்
27.04.2015 சித்திரை-14 திங்கட்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : சுமார் 8.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் மீனாட்சி நாயக்கர் மண்டகப்படிக்கு சுவாமி அம்மன் நண்பகல் 12மணிக்கு எழுந்தருளல்
இரவு எழுந்தருளும் நேரம் : சுமார் 7.00மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : நந்திகேசுவரர்-யாளி
விபரம் : காலை 8.00 மணிக்கு கங்காளநாதர் மட்டும் மாசி வீதி எழுந்தருளல். இரவு சுவாமி அம்மன் நான்கு மாசி வீதிகள் சுற்றி வந்து, அஷ்ட சக்தி மண்டபத்தில் திரு. எம். ராசுபண்டாரம் குமாரர்களால் நடத்தப்படும் புஷ்ப சிங்கார திருக்கண்ணில் இரட்டைசோடசோபசார தீபாராதனை ஆன பின் கோயிலுக்குள் எழுந்தருளல்.

எட்டாம் திருநாள்- பட்டாபிஷேகம்
28.04.2015 சித்திரை-15 செவ்வாய்க்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : சுமார் 10.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : கீழச்சித்திரை வீதி, தெற்கு ஆவணிமூலவீதி திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசிவீதி
வாகனம் : தங்கப்பல்லக்கு
எழுந்தருளும் மண்டபம் : மேலமாசிவீதி திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி, பின் பிற்பகல் 3.00 மணிக்குப் புறப்பாடாகி கோயிலுக்குள் வருதல்.
இரவு எழுந்தருளும் நேரம் : சுமார் 9.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : வெள்ளி சிம்மாசனம்.
விபரம் : காலை சபாநாயகர் புறப்பாடாகி ஊடல் லீலை நடைபெறும். இரவு 7.36 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம். அருள்மிகு மீனாட்சி அம்மனுக்குக் கிரீடம் சாற்றி செங்கோல் கொடுத்தல். திருக்கோயில் தக்கார் திரு. கருமுத்து தி. கண்ணன் அவர்கள் அருள்மிகு மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து. மீண்டும் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கரத்தில் செங்கோலைச் சமர்ப்பிக்கும் காட்சியைக் கண்டு அம்மனின் திருவருள் பெற்று உய்ய வேண்டப்படுகிறது.

ஒன்பதாம் திருநாள் - திக்கு விஜயம்.
29.04.2015 சித்திரை-16 புதன்க்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : சுமார் 8.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசிவீதிகள்
வாகனம் : மரவர்ணச் சப்பரம்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் சிவகங்கைராஜா மண்டகப்படி
மாலை எழுந்தருளும் நேரம் : சுமார் 6.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : இந்திரவிமானம்
விபரம் : வடக்கு மாசிவீதி, கீழமாசிவீதி சந்திப்பு இடத்தில் உள்ள லாலாஸ்ரீ ரெங்க சத்திரம் திருக்கண் மண்டபத்திற்கு எழுந்தருளி அருள்மிகு மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்.

பத்தாம் திருநாள்- திருக்கல்யாணம்-பூபல்லக்கு
30.04.2015 சித்திரை-17 வியாழக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : சுமார் 4.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு சித்திரை வீதிகள்
வாகனம் : வெள்ளி சிம்மாசனம்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நாகப்பச் செட்டியார் கட்டளை மண்டகப்படி
இரவு எழுந்தருளும் நேரம் : சுமார் 7.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகன விபரம் : யானை- ஆனந்தராயர் பூப்பல்லக்கு
விபரம் : திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமியும், அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாளும் காலை 6.00 மணிக்கு எழுந்தருளல். கோயிலுக்குள் அதிகாலை 4.00 மணிக்கு அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பைய்யர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளாகி, நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வந்து, பின் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, பின்பு திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி காலை 9.00 மணிக்குமேல் 9.30மணிக்குள் மிதுன லக்கனத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். இரவு திரு. ஏ. சொக்கலிங்கம் பிள்ளை டிரஸ்டிலிருந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பெற்ற ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா.

பதினோராம் திருநாள்-திருத்தேர் -சப்தாவர்ணச்சப்பரம்
1.05.2015 சித்திரை-18 வெள்ளிக்கிழமை
காலை எழுந்தருளும் நேரம் : சுமார் 6.30 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : திருத்தேர்
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் ம. முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியும் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியும்
இரவு எழுந்தருளும் நேரம் : சுமார் 7.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசிவீதிகள்
வாகன விபரம் : சப்தாவர்ணச்சப்பரம்
விபரம் : அதிகாலை 5.30 மணி முதல் 5.54 மணிக்குள் மேஷ லக்கனத்தில் சுவாமி அம்மன் தேருக்கு எழுந்தருளல். காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல்.

பன்னிரண்டாம் திருநாள்- வெள்ளி ரிஷபம்
2.05.2015 சித்திரை-19 சனிக்கிழமை
எழுந்தருளும் மண்டபம் : கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபம்
இரவு எழுந்தருளும் நேரம் : சுமார் 7.00 மணி
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசிவீதிகள்
வாகன விபரம் : வெள்ளி ரிஷபம்
விபரம் : பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தம், தேவேந்திர பூஜை. இரவு 9 மணிக்கு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும், அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் விடை பெற்றுக் கொள்ளுதல்.