QUICK LINKS

 . Rudraksha
 . Lord Shiva
 . Temples
 .
 
Navagrahams
 .
 
Chamakam
     English     Tamil

INTERESTING LINKS

 . Sri Rudram
 .
Lord Shiva
 .
Shivalingams
 .
Shiva Ashtothram
 .
Lingashtakam
 .
Angaabhyaasam
 .
Rudraksha
 .
Abisheka List.
 .
Flower List
 .
Do Shanku Puja
 .
Venue
 

DIGITAL PHOTOS

 . Pradosham photos 
 .
Shivarathri-05
 . Shivarathri-06 
 . Live Arathi-05
 .
Old Photo Gallery
 .
Shanku Pooja

 

WHATS NEW

 . Seetha kalyanam 
 
. Panchgavyam
 . Thevaramtamil
 . ThirugyAna Sambandar
 . Amavasya 
 . Mahalayapaksham
 

MISCELLANEOUS

  . Developers
  . Contact us 
 

MAHASHIVARATHRI

  . Why we celebrate? 
  . Story of King 
  . Story of Ganga 
  . How it is performed-I 
  . How it is performed-II 
  . Origin of Shiva Lingam 
  . Shivarathri Vratham
  . Origin of Shiva Lingam
  . Shivrathri Puranam I
  . Shivratri Puranam II
 

BOOKS

   
  . Pradosha Pooja Vidhi
    Tamil - released
  . Pradosha Pooja Vidhi
    Sanskrit  - released

DOWNLOADS


  . Click here to
     browse various
     free
downloads


Please read/keep  page numbers 49, 50, 51,instead of 49, 51, 50.  Error is regretted. Please download the photos as well to make it as a book.

COMING SOON

 .  Sri Rudram meaning
    in Tami 
 .  Photo Gallery of
    
Lord Shiva   
 .  Neyvedhyam recipes
 .  Meaning of Vedas 
 .  Audio downloads
 

சமகம் - தமிழ்ப் பொருளாக்கம்

ஓம் ஸ்ரீ கணேசாய நம:






















தமிழில் : ஈஷ்வர் கோபால்

 மறை         :  வேதம்
 எழுதாக்கிளவி  :  வேதம்
 வேள்வி       :  யக்ஞம்/ஹோமம்
  மறைநூல்  : சாஸ்திரங்கள்
  பாண்டம்   : பாத்திரம்/ஏனம்
  பண்டம்    : வஸ்து, பொருள்        


எல்லாம் வல்ல இறைவனும், உமையை இடப்பாகம் தாங்கியவனும், தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாதவனுமாகிய சிவபெருமானின் அருட்பெரும் கருணையுடன் கூடி, ஒரு கன்னி முயற்சியாக இந்த சமகத்தின் தமிழுறையை அளிக்கிறோம். கூடியவரை தமிழ் பேசும் ஆன்மீகஅன்பர்கள் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் எளிதாக கொடுத்துள்ளோம்.  ஏதாவது தவறு இருப்பின் அடியேனுடையஃதேயன்றி வேறு யாரோடுடையதும் அல்ல.
 

சமகம் என்ன சொல்கிறது?

ஸ்ரீருத்ர பாராயணம் சமக பாராயணத்துடன் கூடித்தான் முழுமையான பலனையளிக்கிறதென்று பெரியோர்கள் கூறுகின்றனர்.  ஸ்ரீருத்ர ஜபத்திற்கு ஐந்து வடிவம் உள்ளதாக கூறப்படுகிறது.  ஸ்ரீருத்ரத்தையும் சமகத்தையும் பாராயணம் செய்வது சாதாரணரூபம், பின் ஒரு முறை ருத்ரத்தை 11 முறையும் பின் சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாவது முறை அங்ஙனம் ஜபித்துச் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அவ்வாராகப் பதினோரு முறை ஜபித்துப் பதினொன்றாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது 'ருத்ரைகாதசினீ'' என்று அழைக்கப்பெறும்.  பதினொரு லகு ருத்ரம் ஒரு மகாருத்ரம்.  பதினொரு மகாருத்ரம் ஒரு அதி ருத்ரம்.

ஸ்ரீருத்ரத்தின் முதல் அனுவாகத்தில் ஈசுவருனுடைய கட்டளையை மீறுபவர்களை அவர் தண்டிப்பதால் அவரின் கோபக்கனைகளை குறைத்து, அமைதி பொழிபவராக வேண்டுமென்றும், சமகத்தில், நாம்வாழத் தேவையான, பலதரப்பட்ட பொருட்களும், சந்ததிகளும்,  செல்வங்களும், பலதரப்பட்ட உலோகங்களும், பொன்னும், கல்வியும், ஞானமும், குறைவில்லா வாழ்வும், இனிமையான தூக்கமும் மற்றும்  வாழ்விற்கு தேவையானவையும்
ஸ்ரீருத்ரனிடம் கோரப்படுகின்றன.

ஆராதிப்பதால் மட்டுமே சிவனை மனம்குளிரவைக்கமுடியும்.  "வாளால் அறுத்துச்சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்" - எப்படி மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது அவர் மீது நாம் கோபம் கொள்வதில்லையோ, அது போன்று துன்பம் வரும்போதும், இன்பம் வரும்போதும், ஈசுவரனிடத்தில் மனம் செலுத்தினால், அவ்ர் நம்மிடத்தில் ஈடில்லா அன்பைப் பொழிகிறார். "பற்றுக பற்றற்றான் பற்றினை அப் பற்றைப் பற்றுக பற்று விடர்க்கு" என்றார் வள்ளுவப்பெருந்தகை. அவர் கூறிய குரளின் விளக்கம் இதுதான்:- பற்று இல்லாத (எந்த ஆசையுமேயில்லாத) ஈசுவரனின் கால்களை இறுக்கமாகப் பிடித்து நம் தும்பங்களை அவனிடம் அர்ப்பணித்துவிட்டு அவனுடைய பற்றை (கால்களைப்) பிடித்துக்கொண்டோமேயானால், நமக்கு பேரின்பம் கிட்டும் என்கிறார். 

அண்ட சராசரங்களிலெல்லாம் வியாபித்து இருக்கும் சிவன், திருநீரை பூசிக்கொண்டும், பிறைச்-சந்திரனை தலையில் வைத்தும், புலித்தோலை அறையில் உடுத்தியும், கன்மணிமாலையை (ருத்திராக்ஷத்தை) அனிந்தும், மயானத்தில் தியானத்தில் அமர்ந்தும், தனக்கென்று எதுவும் வேண்டாதவராய் ஆயிரம் கதிரவனைப்போல் ஒளிர்கிறார். அப்படிப்பட்ட உன்னத கருணாமூர்த்தியை வேண்டுபவர்களை 'வாழ்க்கை' என்ற துன்பக்கடலிலிருந்து  கரையேற்றுகிறார். 

இருப்பினும், உலக வாழ்வில் 'பொருள்' இல்லாமல் வாழ்வதென்பது இயலாது, அதனால், எல்லா செல்வங்களையும் கொடுக்க வேண்டி அவரிடம் வழிபடுவதே சமகப் பாட்டு.  திருடர் முதலியவர்களுடைய உடம்பில்கூட இரண்டு வடிவில் உயிருருவமாகவும்,  ஈசுவர உருவமாகவும் இருக்கும் அம்பிகாநாதனை மனதார வழிபட்டு வேண்டிய பொருட்களை பெற்று, நற்கதி அடைய
சமகம் உதவுகிறது.

ஸ்ரீருத்திரனின் போர்கருவிகளும், கோபமும் நம்மை துன்புறுத்த வேண்டாம் என்று முதலில் வேண்டப்பட்டபின், வாழ்வியல் இன்பத்திற்குத் தேவையான செல்வங்களை வேண்டுவதே சமகம்.  அதன் பொருட்டு, உலோகங்களையும், அடக்கி ஆளும் திறனையும், நீண்ட ஆயுளையும், வீடு, நிலம், மரம், செடி, புலன்கள், கையாளும் திறன், இன்பும், குதுகூலம், எதிரிகளினால் ஏற்படும் தொல்லைகளை களைந்தெடுக்கும் திறன், இன்ன பிற வாழவியல் இன்பங்கள் -- ஆகியவற்றை வேண்டிப்பெறுவது இப் பாட்டின் உட்கருத்து.

தூய்மையான வெண்மை நிறமுடையவரும், முக்கண்ணரும், ஐந்து முகமுடையவரும், கங்கையின் இறுமாப்பை அடக்கி சிரசில் தாங்கியவரும், பத்துக் கைகளுடையவரும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவரும்; சந்திரனைச் சிரசில் அடையாளமாகக் கொண்டவரும், நாகப்பாம்பைப் பூணூலாய்த் தரித்தவரும், 'உருவம்' - 'உருவமில்லாமை' என்ற இருநிலைகளைக் கொண்டவரும், புலித்தோலைப் போர்த்தியவரும், உமாதேவியயைப் பாதி உடலாகக் கொண்டவரும் எம்மையும், என்னைச்சுற்றியுள்ள எல்லா உயிர்களையும் மற்றும் உலகத்திலுள்ள அத்தனை உயிரரினங்களையும் காக்க  வேண்டுகிறேன்.

அனைத்து 'இக' 'பர' இன்பத்தையளிக்கும் சமகப்பாட்டின் விளக்கவுறையையும் சொற்கட்டுக் களையும் நாம் விரிவாகப் பார்ப்போம். 


ஒவ்வொரு சொற்றடுக்குகளுக்கும் பொருள்கள்

A.  வழிபாடு

கருத்து:  முதல் வேண்டுதலாக 'கர்ம காண்டம்' என்று அழைக்கபெறும் 'சமகப்பாட்டு' முதலில் இரண்டு கடவுள்களை சேர்த்து வேண்டப்படுகிறது.  தினமும் விதிக்கப்பட்ட செயல்பாட்டு ஆணைகளை செவ்வெனே செய்து முடிக்கவும், அலம்பித்தெளிவு படுத்தவும், வேள்வியில் ஈடுபடும் பொருட்டு, தொடர்ந்து வேள்வித்தீயில் மூங்கில் பட்டை கொண்டு நெய் ஊற்றப்படும் போதும் (வாஸோர்த்தரா) சமகம் ஓதப்படுகிறது.  பொதுவாக 'கடவுள்' என்று வேண்டப்படுவதால், அக்னி, விஷ்ணு அல்லது ருத்திரனை வேண்டுவதாக பொருள்கொள்ளப்படுகிறது.

வடமொழி : ஓம் அக்னாவிஷ்ணு சஜோஷஸேமாவர்த்தந்து வாம் கிர: த்யும்னைர்வாஜேபிராகதம் ||

ஓம் அக்னியும் விஷ்ணுவும் ஆகியவர்களே| எங்களிடம் ஒருமித்து அன்பு கனியும் மனமுடையவர்களாக நீங்களிருவரும் இருக்க வேண்டும்.  உங்களை வணங்கும் இவ்வார்த்தைகள் உங்களை மகிழ்விக்கட்டும்.  நீங்களிருவரும் எல்லாவித பொன், பொருட்களுடனும், உணவுப் பொருள்களுடனும் எங்களுக்கு கொடுத்து வாழ்த்த எழுந்தருள வேண்டும்.


 

1. உடம்பும், உடம்பு சார்ந்தவைகளும்.
     36 வகையான பொருட்கள் வேண்டப்படுகின்றன இப்பிரிவில். 

கருத்து: ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தனித்தன்மை கொடுக்கப்ப்ட்டுள்ளது.  மேலும் எல்லாப் பிரிவுகளும் உச்சக்கட்டத்தில் ஒரே வழிபாட்டு நோக்கின் இலக்கை அடைய வழிகோலுகிறது.  இந்த 'வார்த்தைப் பின்னல்கள்' சுவையாகவும், அதே நேரத்தில் முறையாக பின்பற்றக்கூடிய  நேர்த்தியுடனும் அமைந்திருப்பது சிறப்பு.  "உடம்புதான் நேர்மை என்ற  வேரின் தொடக்கம்" என்று ஒரு வடமொழி வழிபாட்டு நூல் குறிப்பிடுகிறது.  இத் தொகுதி முழுவதும் 'உடம்பு' சார்புடையவையே அலசப்படுகிறது. 1-4 உணவுப்பதார்த்தங்களும், 5-12 அர்ப்பணிப்பதினால் கிடைக்கும் உணவுப்பொருள்களும், 13-36 உடம்பும் அதன் உறுப்புகளும், அவற்றின் அமைப்புகளும் அலசப்படுகின்றன.         

வடமொழி : வாஜச்ச மே ப்ரஸவச்சமே ப்ரய்திச்ச மே ப்ரஸிதிச்ச மே தீதிச்ச மே க்ரதுச்சமே ஸ்வரச்ச மே ச்லொகச்ச மே ச்ரவச்ச மே ஜ்யோதிச்ச மே ஸுவச்ச மே ப்ராணச்ச மேSபானச்சமே வ்யானச்சமேசுச்சமே சித்தஞ்சம ஆதீதஞ்ச மே வாக்சமே மனச்சமே சக்ஷுச்ச மே ஸ்ரோத்ரஞ்சமே தக்ஷச்ச மே பலஞ்ச ம ஓஜச்ச மே சஹச்ச ம் ஆயுச்ச மே ஜராச ம ஆத்மா ச மே தனூச்சமே சர்ம ச மே வர்ம ச மேங்கானி ச மேஸ்தானி ச மே பரூக்ம்ஷி ஷி ச மே சரீராணி ச மே.

பொருள் : உணவுப் பொருள்களும், உணவளிக்கும் மனதும், தூய்மையான உணவும், உணவு உட்கொள்ளும் கொடுப்பிணையும்,  உணவளிக்கும் வேட்கையும், உணவைச் செறிக்கவைக்கும் தன்மையும், உணவை சம்பாதிக்கும் வேள்வியும், வேள்வி செய்யும் போது பாடப்படும் பாட்டை சரியாக உச்சரிக்கும திறனும், குயில் போல இனிமையான குரலும், புகழும், சொற்களை கையாளும் திறமையும், கேள்வித்திறமையும், நன்றாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் திறனும், உள்ளொளியும், சொர்க்கமும், உடம்பில் சீரான மூச்சுக்காற்றும், மூச்சுக்காற்றின்மையும், மேலும், அறிவினால் ஏற்படும் ஞானமும், அந்த ஞானத்தினால் துரிதமாக அறியப்படும் செய்திகளும், சுவையான பேச்சும், திடகாத்திரமான மூளையும், கூர்மையான பார்வையும், துல்லியமான காது கேட்கும் திறனும், உயிரும், எண்ணங்களும், எண்ணத்தினால் அறியப்பட்ட பொருளும், அறிவொளியினால் அறியப்படும் உந்துதலும், செயல்பாட்டின் திறனும், மூச்சுக்காறின்திறனும், எதிரிகளை வெல்லுந்திறமையும், நீண்ட ஆயுளும், மதிக்கப்படும் முதுமையும், தேவையான அளவு திமிரும்,     உள்ளொளியும், செதுக்கினாற்போன்ற உடல்வாகும், நலமும் உடலைக்காக்கும் கவசம் முதலியனவும், திடமான உறுப்புக்களும் எலும்புகளும் கணுக்களும் - திடமான மூட்டுகளும், மறுபிறப்பால் உயர்ந்த தலைமுறையில் பிறவிக் கொடுப்பிணையும்  - ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.


2. அழகான உடம்பும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும்,
உடல் உறுப்புக்களின் நேர்த்தியும்.

     38 வகையான பொருட்கள் வேண்டப்படுகின்றன இங்கு.

கருத்து: அழகான உடம்புறுப்புகளை வேண்டும் முதல்பிரிவிலிருந்து விலகி, வாழ்க்கையை மேம்படுத்தவும், செல்வத்தைப் பெறுக்கவும், விரும்பியதை அடையவும், இலக்கை நிர்ணயத்து அதை அடையவும் முற்படும் மனித வாழ்வு இங்கு சித்தறிக்கப்படுகிறது.  ஒழுங்கான உறுப்புகள் தனது உடம்பில் ஒருமனிதனுக்கு கிடைக்குமாயின், அடுத்தது அதிகாரத்தை நோக்கியும், ஆளும் திறனை நோக்கியுமே அவன் மனம் செல்லும்.  பரந்து விரிந்த நாட்டையும், நிலத்தையும் அடக்கி ஆளும் வேட்கையும் அவன் மனதில் கனல்போல் எறிவதற்கு அவனுக்கு சரியாக அமைந்த உடல் உறுப்புகளே காரணம்.      கோபப்படும் இடத்தில் கோபம் வரவேண்டுமென்று வேண்டப்படுவது இப்ப்ரிவின் சிறப்பு.  ஹிந்துமதம் ஒருபோதும் முழுகொல்லாமையை கடைபிடிக்க அறிவுறுத்தியதில்லை.  "சரியான நேரத்தில் சரியான காரணத்திற்கு கோபம் கொள்ளாதவன் கோழை" என்றார் தத்துவஞானி அரிஸ்டாட்டில். வால்மீகி அதேபோல், ஸ்ரீ ராமரை அவர் கொண்ட "யுக்த க்ரோதத்திற்காக" பாராட்டுகிறார். கடலைத்தாண்ட வேண்டி, "கடல்கடவுளுக்கு" தன் உரிய வணக்கத்தையும், அர்ப்பணிப்புகளைச்செய்தும், அவன் வராது போகவே, கோபம் கொண்டு கடலைஅழித்துவிட துணிந்த இச்செயல் பாராட்டப்படுகின்றது.  உலகவியலை விட்டு விலகிப்போகச்சொல்வதாக ஹிந்துமதத்திற்கு ஒரு குற்றச்சாட்டு உண்டு, ஆனால் அத்தகைய கூற்று பொய் என்று ருத்திரம்/சமகம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.  "சம்ச மே, மயச்ச மே" என்று இவ்வுலகிலும், மேலுலகிலும் எது நன்மை பயக்குமோ அவைகள் எனக்கு கிடைக்கட்டும் என்று வேண்டப்படுகிறது.  உடலுக்கு நன்மைபயக்கும் விளயாட்டுக்களும்(21,22),  உன்னிப்பாக கவனத்தை செலுத்துதலும் (16), கடந்து போன இனிமையான வாழ்வும், நடக்கவிருக்கும் ரம்மியமயமான நாட்களும், (29,30) வேண்டப்படுவதை நோக்கும்போது, சாதாரண விருப்பத்திலிருந்து படிப்படியாக உயர்ந்து சிந்தனையின் வளர்ச்சியை அடைந்துள்ளது தெரிகிறது.

வடமொழி: ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே மன்யுச்சமே பாமச்ச மேமச்ச மேம்பச்ச மே ஜேமா ச மே மஹிமா ச மே வரிமாசமே ப்ரதிமா ச மே வர்ஷ்மா ச மே த்ராகுயா சமே வ்ருத்தஞ்ச மே வ்ருத்திச் சமே சத்யஞ்ச மே ஸ்ரத்தா ச ம ஜகச்ச மே தனஞ்ச மே த்விஷிச்ச மே க்ரீடா ச மே மோதச்ச மே ஜாதஞ்ச மே ஜநிஷ்யமாண்ஞ்ச மே சூக்தஞ்சமே ஸுக்ருதஞ்ச மே வித்தஞ்ச மே வேத்யஞ்ச மே பூதஞ்ச ம ருத்தஞ்ச ம ருத்திச்ச மே க்லுப்தஞ்ச மே க்லுப்திச்ச மே மதிச்ச மே சுமதிச்ச மே ||

பொருள் : மனிதர்களில் மேன்மையாகப் போற்றப்படுவதும், தலைமையை ஒளிரச்செய்பவராயும், ஏற்கத்தகுந்த உட்பகைகளில் கோபமும், அளவிர்க்குட்பட்ட வெளிப்பகைகளின் கோபமும், ஆழங்காணமுடியாத மனமும், அதைச்சார்ந்த எண்ணமும், இனிமையான குளிர்ந்த தண்ணீரும், எதிரிகளை வெல்லும் திறமையும், தளராத ஆளுமையும் வெற்றியினால் கிட்டும் செல்வமும், பெருமையும், உள்ள பொருட்களிலேயே மிகவும் உயர்ந்த பொருளாக எல்லோராலும் மதிக்கப்பட்டதும், வீடு, நிலம் முதலிய செல்வமும், மேலும் கணக்கிடமுடியாத செல்வங்களும், உயர்ந்த படிப்பினால் ஏற்படும் எண்ணங்களும், ஆளுமையும், உண்மையும், "மறை" போன்ற உயர்ந்த "எழுதாக்கிளவி" நூலில் முழு ஈடுபாட்டுடன் கூடிய நாளைய வாழ்வும், அசையும் சொத்தும், அசையாச் சொத்தும், பலவித தங்கம் போன்ற சொத்தும், வெள்ளியும், மயக்கும் ஆளுமையும், சுண்டியிழுக்கும் ஆணத்தமும், உடம்பின் பெருமையும், எண்ணச்சிதறல்களை உண்டாக்கும் விளையாட்டுக்களும், அதனால் ஏர்படும் கேளிக்கையும், மக்கட்செல்வமும், பேரப்பிள்ளைகளினால் ஏற்படும் தலைமுறை பெருக்கமும், அழியாத தலைமுறையும், செல்வப்பெருக்கும், நன்னம்பிக்கையும், மரம், செடி போன்ற பொருட்களும், பணமும்,  உண்டானதும், உண்டாகப்போவதும், பலன்களும், சேமித்த பொருளும், இனி கிடைக்கக்கூடிய பொருளும், ச